திண்டுக்கல் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு முகாம்

திண்டுக்கல்  மாநகராட்சியில்  டெங்கு கொசு ஒழிப்பு முகாம்
X

திண்டுக்கல் நகரில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்

திண்டுக்கல்லில் மாநகராட்சி ஆணையர் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு பணிகள் ஆய்வு:

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் இன்று காலை டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பொதுமக்களுக்கு மழைநீர் தேங்க வாய்ப்பிருக்கும் இடங்களை கண்டறிந்து, உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தவும், வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், பூந்தொட்டிகள், மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காத வகையில் தினசரி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 44-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டன், திமுக பிரமுகர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் தக்ஷிணாமூர்த்தி உள்ளிட்டோர் கொண்டனர்.

சத்திரப்பட்டி, கள்ளிமந்தையம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்:

பழனி அருகே உள்ள சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது:

இதேபோல், ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம் துணை மின்நிலையத்தில், நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.இதையொட்டி, இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் மாவட்டம், பழனி, பாப்பம்பட்டி பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு காளீஸ்வரி என்பவரை கத்தியால் குத்தி 2 1/2 பவுன் தங்கச் செயினை பறித்து சென்ற பாலன்(எ)பாலுசாமி என்பவரை, பழனி தாலுகா காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவ்வழக்கு, பழனி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில், பழனி தாலுகா காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால், பழனி முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி, பாலன் (எ) பாலுசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மதுவிலக்கு துறை அதிகாரி ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் , செம்பட்டி பகுதிகளில், கடந்த அரசு விடுமுறை நாட்களில் மது விற்பனை செய்யப்பட்டு வந்தனர்.இன்று செம்பட்டி நிலக்கோட்டை பகுதிகளில் அரசு மதுபான கடைகளில்அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil