கொடைக்கானலில் கொரோனா தடுப்பு பணிகள் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி ஆய்வு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்..
தொடர்ந்து அன்னைதெரசா மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் , ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு மருத்துவ குழுவிடம் தடுப்பு நடவடிக்கைகள் ,கொரோனா நோயாளிகளுக்கு அமைக்கப்படும் படுக்கை வசதி போன்றவற்றையும் கேட்டறிந்தார் .
மேலும் கொடைக்கானல் காவல் நிலையத்தில் பள்ளிமாணவிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தார் .. கொடைக்கானலை சேர்ந்த பள்ளி மாணவர்களான தருண் மற்றும் பிரசன்னன் இந்திய அளவில் சாதித்துள்ளனர் ..சாதித்த மாணவர்களை அழைத்து நினைவு பரிசுகளும் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu