திண்டுக்கல்லில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டுக்கல்லில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
X

திண்டுக்கல் மருத்துவக்கல்லுாரி சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில், இந்திய மருத்துவ சங்கத்தின், திண்டுக்கல் கிளை சார்பாக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திண்டுக்கல், இந்திய மருத்துவ சங்கம் கிளையின் சார்பாக, உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துவங்கப்பட்டு, பேருந்து நிலையம் வழியாக நகர் முக்கிய பகுதிகளில் சென்று திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முடிவடைந்தது.

இந்த பேரணியில், நூறுக்கும் மேற்பட்ட திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரி செவிலியர் மாணவர்கள் கலந்து கொண்டு, 'புற்றுநோய் என்ன காரணங்களால் வருகிறது' என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, திண்டுக்கல் நகரின் முக்கிய சாலைகள் வழியாக பேரணி சென்றது. மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பேரணியில் மாணவிகள் கோஷங்களும் எழுப்பிச் சென்றனர்.

பேரணியை திண்டுக்கல் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜஸ்ரீ துவக்கி வைத்தார். பேரணியில் தலைவர் டாக்டர் மகாலட்சுமி, பொருளாளர் டாக்டர் டீன் வெஷ்லி மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வீரமணி , டாக்டர் அன்புச்செல்வன், டாக்டர் சுனிதா ஆகியோர் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை அனைத்தும் திண்டுக்கல் இந்திய மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஜோசப்கிறிஸ்டோபர் பாபு செய்திருந்தார்.

Next Story