தமிழகம் முழுவதும் பைக் திருடிய பழனியை சேர்ந்த 3 பேர் கைது

தமிழகம் முழுவதும் பைக் திருடிய பழனியை சேர்ந்த 3 பேர் கைது
X

பைக் திருடர்களுடன்  போலீசார்.

தமிழகம் முழுவதும் பைக் திருட்டில் ஈடுபட்ட பழனியை சேர்ந்த மூன்றுபேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்தசில நாட்களாக பைக் திருட்டு சம்பவம் அதிகளவில் நடைபெற்றது.

பைக் திருட்டு குறித்து பழனி காவ்லநிலையத்தில் தொடர் புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இதனையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பழனி, புதுநகர் பகுதியில் ஆவணங்களின்றி‌ பைக் ஒன்று விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பழனி டிஎஸ்பி சிவா அறிவுறுத்தலின்பேரில், பழனி நகர காவல் ஆய்வாளர் பாலமுருகன்,சார்பு ஆய்வாளர் ரஞ்சித்குமார், குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் தியாகராஜன்,கண்ணன் உள்ளிட்ட போலீசார் புதுநகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது புதுநகர் ரயில்வேகேட்‌ அருகே இரண்டு பைக்குகளில் வந்த மூன்றுபேரை நிறுத்தி விசாரணை செய்தனர்.

அப்போது அவர்கள் ஓட்டிவந்த பைக்குகளுக்கு ஆவணங்கள் ஏதுமில்லை என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மூவரும் பல்வேறு இடங்களில் பைக்குகள் திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் பழனி மதினா நகரை சேர்ந்த ஹபீப்ரகுமான்(23), புதுநகர் முகமதுஜாபர்(19), பழனி பெருமாள் கோவில் நடுத்தெருவை சேர்ந்த சக்திவேல்(20) என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து ராயல் என்ஃபீல்டு புல்லட், பல்சர், ஹோண்டா, யமஹா உள்ளிட்ட 11பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து மூவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவரில் ஹபீப்ரகுமான் மீது இரண்டு வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்