பழனிமுருகன்கோயிலில் முடி திருத்தும் தொழிலாளர்கள் பேட்ஜ் அணிந்து போராட்டம்
பழனி முருகன் கோயிலில் பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈரோடுபட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள்
பழனி திருக்கோவில் முடிகாணிக்கை செலுத்தும் இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும். கோவில் உதவி ஆணையர் லட்சுமியை, கண்டித்து கண்டன பேட்ஜ் அணிந்து பணி மேற் கொண்டுள்ளனர்.
பக்தர்களிடம் பணம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் மன்னிப்பு கேட்க சென்றபோது, உதவி ஆணையர் லட்சுமி, தொழிலாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதை கண்டித்து 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கண்டன பேட்ஜ் அணிந்து பணி மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் முருகனுக்கு முடிக்காணிக்கை செய்வது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக பழனி அடிவாரம், சரவணப்பொய்கை, சண்முகநதி, தேவர் சிலை உள்பட 8 இடங்களில் முடிக்காணிக்கை செலுத்துவதற்காக மண்டபங்கள் செயல்படுகிறது.
இங்கு 300க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக 5 ஆயிரம் ரூபாயும், கூடுதலாக ஒரு மொட்டைக்கு 30ரூபாய் வீதம் மாதம் சராசரியாக 13ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப் படுகிறது. இது திருவிழா காலங்களில் இன்னும் கூடுதலாக ஊதியம் கிடைக்கும்.
இந்நிலையில், கோவில் உதவி ஆணையர் லட்சுமி என்பவர் முடிதிருத்தும் தொழிலாளர்களை தரக்குறைவாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, பழனியில் உள்ள மொட்டை அடிக்கும் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கண்டன பேட்ஜ் அணிந்து பணிகளை மேற்கொண்டனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu