/* */

மாமன்னன் படத்திற்கு தடை: தேசிய பார்வர்டு பிளாக் கோரிக்கை

மாமன்னன் படத்திற்கு தடை விதிக்க தேசிய பார்வர்டு பிளாக் கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

மாமன்னன் படத்திற்கு தடை: தேசிய பார்வர்டு பிளாக் கோரிக்கை
X

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தமிழ் தேசிய பாஃர்வட் பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி தமிழ் தேசிய பாஃர்வட் பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் தேசிய பாஃர்வட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் வதிலை செல்வம் கூறுகயைில், தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த காலங்களில் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து அனைத்து தமிழ் வாழ்ந்து வரும் இக்காலகட்டத்தில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் என்பவர் இணக்கமாக வாழ்ந்து வரும் மக்களை பிளவு படுத்தும் வகையிலும், அவர்களுக்கிடையே மீண்டும் சாதிய வன்முறைகள் ஏற்படுத்தும் நோக்கோத்தோடும் மாமன்னன் என்கிற திரைப்படைத்தை இயக்கி உள்ளார்.

இந்த திரைப்படம் திரையிடப்பட்டால் அமைதியாக, நட்புறவாக மற்றும் இணக்கமாக வாழ்ந்து வரும் தமிழ் சாதிகளுக்கிடையே மீண்டும் சாதிய மோதல்கள் உருவாகி தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது.

ஆகையால் இந்த மாமன்னன் திரைப்படத்தை தென் மாவட்டங்களில் திரையிட அனுமதி அளிக்க கூடாது எனவும்; மேலும் தொடர்ந்து இது போன்ற சாதிய வன்முறைகள் ஏற்படுத்தும் விதமாக திரைப்படங்கள் எடுத்து அமைதியாக இருக்கும் மக்கள் மத்தியில் வன்முறைகளை தூண்டி அதில் ஆதாயம் அடைய நினைக்கும் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்கள் மீது தமிழ்நாடு அரசு பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கைகள் மேற்கொள் வேண்டும்.

தமிழக மக்களை குறிப்பாக தென் மாவட்டங்களில் அமைதியாக வாழும் மக்களை காக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் இது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்து உள்ளேன் நல்லது நடக்கும் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Updated On: 29 Jun 2023 9:02 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...