Bakery fire accident திண்டுக்கல் பேக்கரியில் திடீர் தீ
திண்டுக்கல்லில் தீ விபத்து ஏற்பட்ட பேக்கரி கடை
திண்டுக்கல் ஸ்டாலின் காட்டேஜுக்குள் இருக்கும் நியூ அஞ்சலி ஸ்வீட்ஸ் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், கடையில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.தகவலறிந்ததும், தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு இடையூறாக புகை பிடித்த 18 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தக்ஷிணாமூர்த்தி தலைமையிலான குழுவினர், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக புகை பிடித்துக் கொண்டிருந்த 18 பேருக்கு தலா ரூ100 வீதம் ரூ.1800 அபராதம் விதித்தனர்.பல முறை அறிவித்தும் பொதுமக்கள் எந்த விதி முறைகளையும்ஒழுங்காக கடைப்பிடிப்பதில்லை. இதுபோன்று அபராதம் விதிக்கும் பட்சத்தில் இனியாவது அவர்கள் திருந்த வாய்ப்பு இருக்குமா?-
கொலை வழக்கில் ,4 பேர் கைது :
மதுரை மாவட்டம், பரவையை சேர்ந்தவர் கவுதம்(38). இவர் மீது மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில், கடந்த 18ஆம் தேதி மது அருந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் கௌதமை வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், நகர் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் தலைமையில், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் பாரதிபுரம் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்கண்ட சம்பவத்தில் , அன்பில்ராஜ், நாகராஜ், பிரகாஷ்,தினகரன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu