பழனி அருகே குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்
பழனி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை.
பிராணிகள் கடும் வெப்பம் காரணமாக தண்ணீரை தேடி ஊருக்குள் வருவது சகஜமாகி வருகிறது.
மலைப் பகுதியில் கடும் வெப்பம் நிலவுவதாகவும், மரங்கள் வெட்டப்படுவதாலும், போதிய மழை இன்றி கடுமையான குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது.இதனால், மலைப் பகுதியில் வசிக்கும் பிராணிகளின் மான், யானை, காட்டெருமைகள் ஆகியவை உணவு மற்றும் குடிநீருக்காக, கிராமத்தில் உள்ள வயல்வெளிகளுக்கு தொடர்ந்து படையெடுத்து வருகிறது. இதனால், விவசாயிகள் வயலுக்கு செல்ல முடியாதபடி நிலை அவ்வப்போது ஏற்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் புலியூர் பகுதியில், குட்டிகளுடன் காட்டு யானைகள் வலம் வருவதால் மலைக்கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
பழனி வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், கொடைக்கானல், வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புலியூர் கிராமத்துக்கு படையெடுத்துள்ளன.
தற்போது இந்த யானைகள், புலியூர் பகுதியில் உள்ள வருவாய்த்துறை மற்றும் விவசாய நிலங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2 நாட்களாக யானைகள் முகாமிட்டு இருப்பதால் விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமாக ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதிகள் மற்றும் பொள்ளாச்சி வனப்பகுதிகள், தேனி மாவட்டத்தில் மேகமலை உள்ளிட்ட வனப்பகுதிகளி்ல் தான் யானைகள் சில நேரங்களில் தண்ணீருக்காகவும், பாதை மாறியும் ஊருக்குள் புகுந்து விடுவது உண்டு. ஆனால் இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி அருகேயும் யானைகள் ஊருக்குள் புகுந்து உள்ளதால் விவசாயிகள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்கள். யானை உள்ளிட்ட காட்டு விலங்குகளிடம் இருந்து விவசாயிகளை காப்பாற்ற தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu