பழனி கோயிலில் முடி திருத்துவோர் இருவர் பணி இடைநீக்கம்: துணை ஆணையர் நடவடிக்கை

பழனி கோயிலில்  முடி திருத்துவோர் இருவர் பணி இடைநீக்கம்: துணை ஆணையர் நடவடிக்கை
X

பழனி முருகன் கோயில்( பைல் படம்)

தொடர்பாக, விசாரணை நடத்திய துணை ஆணையர் லட்சுமிக்கும், முடிஇறக்கும் தொழிலாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

பழனி முருகன் கோவிலில் முடி இறக்குவோர் கட்டாயமாக பணம் பெறுவதாக பக்தர்கள் புகார் செய்ததை தொடர்ந்து இருவர் பணியிடை நீக்கம்:

திருச்சி பாலக்கரையை சேர்ந்த பாலமுருகன் என்ற பக்தர் முடி காணிக்கை செலுத்திய போது, கட்டாயமாக ரூ.100 வாங்கியதாகவும் அங்கு வந்த மாற்றுத்திறனாளியை அனாவசியமான வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியதாகவும், கோயில் துணை ஆணையர் லட்சுமியிடம் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக, விசாரணை நடத்திய துணை ஆணையர் லட்சுமிக்கும், முடிஇறக்கும் தொழிலாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து புகார் செய்தவரிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற்றுக் கொண்டு, முடி இறக்கும் தொழிலாளர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து துணை ஆணையர் லட்சுமி உத்தரவிட்டார்.

திண்டுக்கல்லில் சாலையில் சுற்றித்திரிந்த 4 மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில், பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும்படி மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டார். இதையடுத்து, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் பேருந்து நிலையம், விவேகானந்தா நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 4 மாடுகளைப் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

மதுரை மாநகராட்சி பகுதிகளிலும் தெருக்களில் மாடுகள் சாலைகள் சுற்றித் திரிவதாக, சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாநகராட்சியில், 100 வார்டுகள் உள்ளன. இதில், பெரும்பாலான வார்டுகளில், சாலைகளில் மாடுகள் போக்குவரத்திற்கும், பொதுமக்களும் இடையில் செய்யும் வகையில் சுற்றித் திரிகின்றன.

இது குறித்து, மதுரை மாநகராட்சி அதிகாரியிடம் அவ்வப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், மதுரை நகரில், அண்ணா நகர், மேலமடை, தாசில்தார் நகர் ,புதூர், கே. கே. நகர் ,வண்டியூர், யாகப்பா நகர், பழங்காநத்தம், சிம்மக்கல் ,புதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்திற்கும் பொதுமக்கள் இடையூறாக மாடுகள் சுற்றி தெரிவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து , மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!