திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸார் நடத்திய சிறப்பு சோதனையில் 18 பேர் கைது
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும், கள்ளத்தனமான மது விற்பனை மற்றும் லாட்டரி விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், மாவட்ட தனிப்படையினர் மற்றும் உட்கோட்ட காவல் துறையினர் இணைந்து மாவட்டம் முழுவதும் சிறப்பு சோதனை நடத்தியதினர்.
சட்ட விரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 7 நபர்கள் மீது 5 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து, 137லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 நபர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதே போல், கள்ளத் தனமாக சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்ட 13 நபர்களை கைது செய்யப்பட்டனர். கைதான அவர்கள் அனைவரின் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 180 மி.லி. கொள்ளளவுள்ள 534 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்டம் முழுவதும் சிறப்பு சோதனை தொடர்ந்து நடத்தப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu