பழனி கோயிலில் தயார்நிலையில் ரோப் கார் வசதி

பழனி கோயிலில் தயார்நிலையில்  ரோப் கார் வசதி

பழனி கோயில்  ரோப்கார்  சோதனை ஓட்டம் 

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்

திண்டுக்கல் மாவட்டம் , பழனி முருகன் கோவிலில் கடந்த 19.8.23- ஆம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, பழுதடைந்த உதிரி பாகங்கள் மாற்றப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் ரோப்காரில் உள்ள 8 பெட்டிகளுக்கும் புதிய வண்ணங்கள் தீட்டும் பணி நேற்று நடைபெற்றது. இன்று காலை ரோப்காரில் எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சோதனை ஓட்டத்தில் போது பெட்டிகள் சீரான முறையில் ஒன்றுடன் ஒன்று மோதாமல் இயங்குகிறதா? என, சரி பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை சென்னை ஐ.ஐ.டி. குழுவினரால் பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதா என, உறுதி செய்யப்படும். அந்த குழுவினர் சான்றிதழ் அளித்து ஓரிரு நாளில் ரோப் கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகாசன பைரவருக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் 3-வது நாளாக முகாம், யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறல்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். 3 நாட்களாக அங்கு முகாமிட்டுள்ள யானைகளை விரட்ட முடியாததால் தடை தொடரும் என தெரிவித்தனர்.

யானைகளை அடர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டாமல் வனத்துறையினர் மெத்தனம் காட்டி வருகின்றனர். அதற்கான நடவடிக்கை எடுக்காமல் யானைகள் வரும்போது சுற்றுலா பயணிகளுக்கு தடை என்றும், அவை தானாக அங்கிருந்து வெளியேறியதும் அனுமதி அளித்து வருகின்றனர்.

திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை

திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக எம்.எஸ்.பி. பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சி டெங்கு இல்லாத மாநகராட்சியாக உருவாக்குவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, பள்ளி ஆசிரியர்கள், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story