சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு : காவல்துறையினர் ஆலோசனை

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு : காவல்துறையினர் ஆலோசனை
X

திண்டுக்கல்லில்  காவல்துறை  சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கூடுதல் எஸ்.பி. வெள்ளைச்சாமி.

திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்பி. வெள்ளைச்சாமி தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் துறை உதவி பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் சாலை பாதுகாப்பு காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ,மாவட்டத்தில் உள்ள சாலைகளில் விபத்து ஏற்படும் பகுதிகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், டிசிஆர்பி டிஎஸ்பி சிவகுமார் உடன் இருந்தார்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2016-ம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்த விக்னேஷ்(29) என்பவரை பட்டிவீரன்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், போலீஸ் ஏஸ்.பி. பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில், பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர்.ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி, விக்னேஷுக்கு ,20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம்

இந்த குறை தீர்ப்பு முகாமில் ,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று அதன் மீது விசாரணை நடத்தப்பட்டது.இந்த முகாமில், இன்று மொத்தம் 16 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், ஐந்து மனுக்கள் மீது மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரடியாக அழைத்து விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது. இந்த சிறப்பு முகாம் ஆனது ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக நடத்தப்படுகிறது எனவே, பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!