மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு கையேடு வழங்கல்

மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு கையேடு வழங்கல்
X

கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.

கொடைக்கானலில் பராமரிப்பு பணி காரணமாக வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ள சுற்றுலா இடங்க ளுக்கு பயணிகள் செல்ல வனத் துறை தடை விதித்துள்ளது

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும்,2 ஆயிரம் மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டு வருகிறது.இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், விழிப்புணர்வு கையேடு தயாரிக்கப்பட்டு இருக்கிறது.இந்த கையேட்டில் இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல்கள், வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மாணவ-மாணவிகளுக்கு தேர்தல் தொடர்பாக, அனைத்து விவரங்களும் தெரிய வாய்ப்பு உள்ளது. இந்த கையேடுகள் தேர்தல் கல்விக்குழுவில் இடம்பெற்றுள்ள மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக, திண்டுக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 2 ஆயிரம் கையேடுகள் வந்துள்ளன.இவை, மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன

ஆட்சியரிடம் மனு.

திண்டுக்கல் நேருஜி நகரில் அரசு உதவி பெறும் தனியாருக்கு சொந்தமான ஜான்பால் மேல்நிலைப்பள்ளியில், கொடைக்கானல்,ஆடலூர், பன்றிமலை, பழனி, ஒட்டன்சத்திரம், உட்பட பல ஊர்களில் இருந்து 86 மாணவர்கள் பள்ளி விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்தனர்.

இந்த நிலையில், பள்ளி நிர்வாகம் விடுதியில் இருந்து மாணவர்கள் அனைவரும் வெளியேறுமாறு கூறியதை அடுத்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

லஞ்சம் வாங்கியவர் கைது

ஒட்டன்சத்திரம் பிர்கா, வருவாய் ஆய்வாளர் திண்டுக்கல் வேடசந்தூர் அருகே சேனான் கோட்டையை சேர்ந்த பாண்டியராஜன்(35). என்பவரை, காவேரியம்மாபட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு வாரிசு சான்றிதழ் தொடர்பாக ரூ.8000 லஞ்சமாக பெறும்போது, லஞ்ச ஒழிப்பு துறையினரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்.

பயணிகளுக்கு தடை:

கொடைக்கானலில் சுற்றுலா இடங்களுக்கு செல்ல பயணிகளுக்கு தடை திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பராமரிப்பு பணி காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எரியோடு பகுதியில் நாளை மின் தடை:

திண்டுக்கல்லை அடுத்த எரியோடு துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (17ந் தேதி) நடைபெற உள்ளது. எனவே, அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எரியோடு, நாகையக் கோட்டை, புதுசாலை, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூர், சவுட கவுண்டன்பட்டி,மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, சித்தூர், காமனம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business