சொத்துவரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு: மாநகராட்சி

சொத்துவரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு:  மாநகராட்சி
X

பேருந்து படிக்கட்டில்  தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் மாணவர்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்

சொத்து வரி செலுத்தாத 28 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தாத நபர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் 15 வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். இதைத்தொடர்ந்து, ரவுண்டுரோடு புதூர், நாகல்புதூர், சாமியார்தோட்டம், ஆர்.எம்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தாத 13 வீடுகளின் குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.

பேருந்தின் படியில் தொங்கி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

திண்டுக்கல் நத்தம் ரோடு திண்டுக்கல்லில் இருந்து அய்யாபட்டி செல்லும் பேரூந்தில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யுகின்றனர். பேரூந்தில் பக்கவாட்டில் இருந்து சுமார் 2 அடி தூரம் வெளியே தொங்கி செல்லும் மாணவர்களை கட்டுப்படுத்த திண்டுக்கல் வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்குமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நத்தம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேலாயுதம்பட்டி, காரக்குண்டு பகுதியை சேர்ந்த ரேணுகாதேவி(35) இவர் வேலாயுதம்பட்டி பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்ற போது, மோட்டார் சைக்கிளில் பின்னாள் வந்த மர்ம நபர்கள் 2 பேர் கண் இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலிசங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து, நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story