ஒட்டன்சத்திரத்தில் காவலர் தற்கொலை ஏன் ? பரபரப்பு தகவல்

ஒட்டன்சத்திரத்தில் காவலர்  தற்கொலை ஏன் ? பரபரப்பு தகவல்
X

ஓட்டன்சத்திரத்தில் தற்கொலை செய்து கொண்ட நாட்டுதுரை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று பரபரப்பு தகவல் வெளியாகியது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் ஐ. வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த நாட்டு துரை (32).

இவர் நேற்று முன்தினம் இரவு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!