திண்டுக்கல் மாவட்ட செய்தி துளிகள்..

திண்டுக்கல் மாவட்ட செய்தி துளிகள்..
X

பைல் படம்

எரியோடு பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை மின்விநியோகம் நிறுத்தம்:

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம்:

திண்டுக்கல் ரயில் நிலையத்தில், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் வேலையின்மைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.இதனால், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள், விவரங்கள் சேகரிக்கப்பு

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள், விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன.மேலும், சுதந்திர போராட்ட வீரர்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவுவாயில் அவர்களின் புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு உள்ளன

இதுமட்டுமின்றி, சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்ட விவரங்களை சேகரித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் புத்தகம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக 29 சுதந்திர போராட்ட வீரர்களின் விவரங்களை சேகரிக்கும் முயற்சி நடக்கிறது. எனவே, சுதந்திர போராட்ட வீரர்கள் தொடர்பாக விவரங்கள் தெரிந்தால் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி தெரிவித்தார்.

கொடைக்கானல் சுங்கச்சாவடியில் 15-ம் தேதி முதல் பாஸ்டேக் நடைமுறை:

கொடைக்கானல் நீர்வீழ்ச்சி அருகே உள்ள சுங்கச்சாவடியில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் பணம் செலுத்தி வருகின்றனர். இங்கு கொடைக்கானல் பகுதிகளில் உள்ள வாகனங்களுக்கு மட்டும் பணம் வசூலிப்பதில்லை. இந்த நிலையில், கொடைக்கானலுக்கு வரும் மற்ற வாகன ஓட்டுனர்களும் உள்ளூர் வாகனம் என தெரிவித்துவிட்டு செல்கின்றனர். இதனால், சுங்கச்சாவடிக்கு தொடர்ந்து வருமானம் குறைந்து வருகிறது.கொடைக்கானல் வாகன உரிமையாளர்கள் தங்களது ஆதார் அட்டை, வாகன உரிமம், வீட்டுவரி உள்ளிட்ட ஆவணங்களை நகராட்சி அதிகாரிகளிடம் கொடுத்து பாஸ் வாகன அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

எரியோடு பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை மின்விநியோகம் நிறுத்தம்:

திண்டுக்கல்லை அடுத்த எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி நாளை (வெள்ளிக்கிழமை) மின்விநியோகம் நிறுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது இது காரணமாக எரியோடு, நாகையாகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகநத்தம், கோட்டைகட்டியூர், சவுடகவுண்டன்பட்டி மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீர்பந்தபட்டி, சித்தூர், காமனம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டனம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என எரியோடு துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் பஞ்சநாதன் தெரிவித்துள்ளார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!