Dindigul District News திண்டுக்கல் மாவட்ட செய்தித் துளிகள்

Dindigul District News  திண்டுக்கல் மாவட்ட செய்தித் துளிகள்
X

திண்டுக்கல் அருகே இறந்தவர் உடலை ஆற்றுக்குள் தூக்கிச் செல்லும் அவலம்.

Dindigul District News திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த முக்கிய செய்திகளைப் பற்றி பார்ப்போம்....படிங்க...

Dindigul District News

திண்டுக்கல் அருகே இறந்தவர் உடலை ஆற்றில் இறங்கி எடுத்து செல்லும் அவலம்

திண்டுக்கல், கோபால்பட்டி அருகே செடிப்பட்டி கிராமத்தில் கிராம மக்களில் யாரேனும் ஒருவர் இறந்தால் அவர்களை புதைப்பதற்கு சந்தனவர்தினி ஆற்றில் கலக்கும் காட்டாறு வெள்ள த்தில் கடந்து சென்று சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் ,செடிப்பட்டியை சேர்ந்த ராமன் (65) என்ற விவசாயி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் ஆற்றில் தண்ணீர் சென்றதால் இறந்தவர் உடலை தோள் மீது சுமந்தபடி ஆற்றுத் தண்ணீரில் இறங்கி சிரமத்துடன் கடந்து சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

நத்தம் அருகே விஷக்காளான்கள் சாப்பிட்ட 3 பேருக்கு உடல்நலக்குறைவு

திண்டுக்கல்,நத்தம் சேத்தூர் அருகே உள்ள கருத்தலக்கம்பட்டியை சேர்ந்த மூர்த்தி (30) இவரது மனைவி பூமாதேவி (25) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு தனது வீட்டு அருகே விளைந்த காளான்களை பறித்து பூமாதேவி சாப்பிட்டார். மேலும் தனது குழந்தை மற்றும் கணவருக்கும் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல்நலக்குறைவு உண்டானது. உடனடியாக நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் மூர்த்தி, பூமாதேவி மற்றும் 2 வயது குழந்தை ஹேமலதா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சாப்பிட்டது விஷக்காளான் வகையை சேர்ந்தது என்பதும் அதனால் தான் இவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல்லில் வாடகை பாக்கி :3 கடைகளுக்கு சீல்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்திருந்த கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கும் படி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் விஜயராகவன் தலைமையிலான போலீசார் பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள வாடகை பாக்கி வைத்திருந்த 5 கடைகளுக்கு சீல் வைக்க முற்பட்டனர் அப்போது 2 கடைக்காரர்கள் தங்களது வாடகை பாக்கி செலுத்தியதை தொடர்ந்து 3-- கடைகளுக்கு மட்டும் சீல் வைத்தனர்.

பழனி அருகே விவசாயியை தற்கொலைக்கு தூண்டியவர் கைது

திண்டுக்கல், பழனி ருக்குவார்பட்டி பகுதியை சேர்ந்த கோபி (எ) பழனிச்சாமி இவர் கீரனூர் பகுதியில் பால் முகவர்களான கௌதம் மற்றும் பிரகாஷ் என்பவர்களிடம் ரூ1 லட்சம் கடன் வாங்கினார் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பித் தராததால் கௌதம் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் பழனிச்சாமியிடம் இருந்த மாடுகளை பிடித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதில் விரக்தி அடைந்த பழனிச்சாமி கள்ளிமந்தம் அருகே அருவங்காட்டு வலசு பேருந்து நிறுத்தம் அருகே விஷம் அருந்தி அதை மொபைல் போனில் பதிவு செய்து விட்டு மயக்க நிலையில் இருந்துள்ளார். பின்பு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் ,பழனிச்சாமி விஷம் அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதாலும், பழனிச்சாமி தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் கள்ளிமந்தயம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கௌதம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்