டிராக்டரில் இருந்து தவறி விழுந்து தூய்மை பணியாளர் மரணம்

டிராக்டரில் இருந்து தவறி விழுந்து தூய்மை பணியாளர் மரணம்
X
திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு

திண்டுக்கல் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து தூய்மை பணியாளர் மரணம்

திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த்து வரும் திண்டுக்கல், ஓடைப்பட்டி அருகே உள்ள எஸ்.பெருமாள் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த நாதன் என்பவர் மனைவி பழனியம்மாள்(48). இவர் சீலப்பாடி ஊராட்சிக்கு சொந்தமான டிராக்டரில் பின்னால் அமர்ந்து சென்ற பொழுது டிராக்டரில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த இவரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து, தாடிக் கொம்பு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் பிறந்த நாளை கொண்டாடிய திமுகவினர்:

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற கிழக்கு வாயிலில் ,திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் பிறந்த நாளை முன்னிட்டு,இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், திமுக மூத்த வழக்கறிஞர்கள், நிர்வாகிகள், இளம் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா