திண்டுக்கல்லில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது

திண்டுக்கல்லில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
X

பைல் படம்

பாலியல் வன்கொடுமை தொடர்பாக 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது.

திண்டுக்கல், வடமதுரை அருகே உள்ள குளத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30). கூலித்தொழிலாளி. இவர், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின் தாயார் வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வடமதுரை அனைத்து மகளிர் காவல் துறையினர் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை தேடி வந்த நிலையில், குளத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்

நத்தத்தை சேர்ந்த வாலிபர் போகோவில் கைது செய்து சிறையில் அடைப்பு.

திண்டுக்கல், சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசை பார்த்து கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த நத்தம், உலுப்பக்குடி பகுதியை சேர்ந்த பிரசன்னா(21). என்பவரை, சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!