கேரள வியாபாரிகள் வராததால் வெறிச்சோடிய காய்கறி மார்க்கெட்

கேரள வியாபாரிகள் வராததால் வெறிச்சோடிய காய்கறி மார்க்கெட்
X

கேரள வியாபாரிகள் வராததால், வெறிச்சோடிய ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்.

கேரளா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 70 சதவீத காய்கறி தேவைகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பூர்த்தி செய்து வருகிறது

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தென் தமிழகத்தி லேயே மிகப்பெரிய மார்க்கெட்டாக உள்ளது.இங்கு, ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து அதிக அளவு காய்கறிகள் விற்ப னைக்கு கொண்டு வரப்படு கிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

குறிப்பாக, கேரளா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 70 சதவீத காய்கறி தேவைகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்தான் பூர்த்தி செய்து வருகிறது. இதற்காக, தினந்தோறும் 100 முதல் 120 லாரிகள் மூலம் கேரளாவுக்கு காய்கறிகள் செல்கின்றன.

நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், பெரும்பாலான வியாபாரிகள் இன்று காய்கறிகள் வேண்டாம் என கூறி விட்டனர். இதனால், கடந்த 2 நாட்களாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் அதிக அளவு காய்கறிகள் கேரளாவுக்கு சென்றன.

இன்று கேரள வியாபாரிகள் யாரும் வராததால், மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. உள்ளூர் விவசாயிகளிடமும் ஏற்கெனவே தெரிவித்து விட்டதால், அவர்களும் காய்கறிகளை கொண்டு வரவில்லை. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் மைதானம் போல் வெறிச்சோடி கிடந்தது.

ஒரு நாளைக்கு ரூ.2 கோடி வர்த்தகம் நடைபெறும் மார்க்கெட்டில், அது முற்றிலும் குறைந்ததால் லோடு மேன்கள் மற்றும் வியாபாரிகள் பாதிப்படை ந்தனர். நாளையும் இதே நிலை தொடரும் என்றும் சனிக்கிழமை மார்க்கெட் இயங்காது என்பதாலும், அடுத்த 3 நாட்களும் காய்கறிகள் விற்பனை நடை பெறாது என்றும் வியாபாரி கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story