திண்டுக்கல்லில் தக்காளி கிலோ ரூ. 60 க்கு விற்பனை

திண்டுக்கல்லில் தக்காளி கிலோ ரூ. 60  க்கு விற்பனை
X
திண்டுக்கல் சந்தையில் கிலோ ரூபாய் 60க்கு தக்காளி விற்கப்பட்டாலும் ,ஒரு நபருக்கு 2 கிலோ மட்டும் வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் மார்கெட்டில், தக்காளி கிலோ ரூ. 60 விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் வரிசையில் நின்று வாக்கிச்சென்றனர்.

திண்டுக்கல் காய்கறி சந்தையில், தக்காளி கிலோ ரூபாய் 60-க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலை உயர்ந்து கொண்டே செல்வதால், தக்காளியை வாங்க சந்தையில், வாடிக்கையாளர் ஆர்வம் குறைந்து வருகிறது. திண்டுக்கல் சந்தையில் கிலோ ரூபாய் 60க்கு தக்காளி விற்கப்பட்டாலும் ,ஒரு நபருக்கு இரண்டு கிலோ மட்டும் வழங்கப்படுகிறது.

உச்சத்தில் தக்காளி விலை:இன்று மொத்த விலையில் ஒரு தக்காளி முதல் ரகம் 140க்கும், இரண்டாம் ரகம் 30க்கும், மூன்றாவது ரகம் 120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சில்லறைவிற்பனையில் ஒரு கிலோ தக்காளி 160வரை விற்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் மார்க்கெட் செல்ல முடியாததால்சில்லறை கடைகளில் அதிக விலைகொடுத்து, தாக்காளி வாங்குகின்றனர். இதனால், ரேஷன் கடைகளில் அதிகளவில் விற்பனை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக அரசு, தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நியாய விலைக் கடைகளில், கூடுதலாக தக்காளி விற்பனை அளவை அதிகப்படுத்தி விற்பனை செய்ய கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!