இடையகோட்டை அருகே மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, இடையக்கோட்டை அருகே உள்ள சின்னகுளிப்பட்டியை சேர்ந்த ராணி(45). இவர், ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தபோது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென ராணியின் வீட்டுக்குள் அவர் புகுந்து ராணியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி ராணி அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். நிலைகுலைந்து போன ராணி 'திருடன் திருடன்' என்று அலறினார்.
அக்கம் பக்கத்தினர் வந்து விரட்டி திருடனை பிடித்து இடையகோட்டை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணையின் போது, செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த கடற்கரை (50). என்பதும் , ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திருவள்ளுவர் சாலையில் இவர், மருந்து கடை மற்றும் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவர் எதற்காக ராணியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நத்தத்தில் வீட்டில் பிடிபட்ட நல்லபாம்பு:
திண்டுக்கல்,நத்தம் அண்ணாநகரை சேர்ந்த லெட்சுமணன்(36). இவரது ,வீட்டில் நல்லபாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதை பார்த்த அவர் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த நல்லபாம்பை லாவகமாக கருவி மூலம் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தந்தைக்கு கத்தி குத்து:
திண்டுக்கல் மைலாப்பூரில் செபஸ்தியார் என்பவரின் மகன் அதே ஊரை சேர்ந்த ஸ்டீபன் என்பவரிடம் மரம் வெட்டும் வேலைக்கு சென்றுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக ஸ்டீபன் சம்பளம் தரவில்லை என்று ஜெகன் கேட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . உடனே ஸ்டீபன், ஜெகன் என்பவரின் சட்டையை கிழித்து சரமாரியாக தாக்கியுள்ளார். தன்னை ஸ்டீபன் சம்பளம் கேட்டதுக்காக அடித்த விசயத்தை ஜெகன் அவருடைய தந்தையிடம் சென்று கூறியுள்ளார். தன் மகனை ஏன் அடித்தாய் என, செபஸ்தியார் கேட்ட போது ,ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஸ்டீபன் கத்தியால் செபஸ்தியாரை குத்தியுள்ளார் அக்கம் பக்கத்தினர் செபஸ்தியாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ஸ்டீபனை தேடிவருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu