போக்சோ வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
போக்சோ வழக்கில், சிறை தண்டனை பெற்ற இளைஞர்.
போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல்சரகம், பாலசமுத்திரத்தை சேர்ந்த தங்கபாண்டி (28) . இவர், பக்கத்து தெருவில் வசிக்கும் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக பழனி தாலுகா காவல்நிலையத்தில் ஆள் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கானது, திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தங்கபாண்டி என்பவருக்கு, 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மற்றும் ரூ.5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
போக்சோ சட்டம் சொல்வது என்ன...
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை, பாலியல் ஆபாசப் படங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க 2012 ஆம் ஆண்டு POCSO சட்டம் அமலுக்கு வந்தது. இது வழக்குகளின் விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் (எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த தேதியிலிருந்து) முடித்து ஆறு மாதங்களில் விசாரணையை கட்டாயமாக்குகிறது.
சிறுவர் ஆபாசப் படங்களைத் தடுக்க அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிப்பதற்கான 2019 ஆம் ஆண்டின் போஸ்கோ மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா 2012 இன் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தை திருத்த முயல்கிறது, இது நீதித்துறையின் ஒவ்வொரு கட்டத்திலும் குழந்தைகளின் நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் துன்புறுத்தல், ஆபாசம் மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான விரிவான சட்டமாகும். சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் சாட்சியங்களைப் பதிவு செய்தல், அறிக்கை செய்தல் மற்றும் விசாரணை மற்றும் குற்றங்களை விரைவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான குழந்தை நட்பு நடவடிக்கைகளை உட்படுத்துவதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu