அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த இளைஞர் கைது

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த இளைஞர் கைது
X

திண்டுக்கல் சேமியா நிறுவனத்தில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அரசுத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் தஞ்சாவூரை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர்

ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் தஞ்சாவூரை சேர்ந்த வாலிபர் கைது செய்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

திண்டுக்கல்லை சேர்ந்த முருகன் என்பவர் மகனுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக நம்ப வைத்து ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக தஞ்சாவூரை சேர்ந்த ராம் கணேஷ் என்பவர் மீது நகர் தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து ,எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி. கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் காவலர்கள் சென்னையில் பதுங்கி இருந்த ராம்கணேஷை கைது செய்து நகர் தெற்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் அணில் சேமியா தயாரிப்பு ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை மளிகை கடையில் நுகர்வோர் வாங்கிய அணில் சேமியாவில் தவளை இறந்து கிடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து,

திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் திண்டுக்கல் இ.பி.காலனி, செட்டிநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, பாடியூர், லக்ஷ்மணபுரம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அணில் சேமியா தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அணில் சேமியா பாக்கெட்டுகளை தற்காலிகமாக விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ,தயாரிப்புக் கூடங்களில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை சரி செய்ய அறிவுறுத்தி அணில் சேமியா நிர்வாகத் துக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது. மேலும் ,அணில் சேமியா தயாரிப்பு ஆலையின் உற்பத்தி பொருள்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை கிண்டி உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதன் முடிவுகள் கிடைத்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கூறினர்.

கொடைக்கானல் – பழனி இடையேயான ரோப் கார் சேவை அமைக்கும் பணி 30% நிறைவு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் – பழனி இடையேயான ரோப் கார் சேவை அமைக்கும் பணி 30% நிறைவு பெற்றுள்ளதாக திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி தெரிவித்துள்ளார். கொடைக்கானல் – பழனி இடையேயான ரோப் கார் சேவை அமைக்கும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது என திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி தகவல் தெரிவித்தார்.


Tags

Next Story