நிலக்கோட்டை அருகே உலக தாய்பால் வார விழா

நிலக்கோட்டை அருகே உலக தாய்பால் வார விழா
X

பிள்ளையார் நத்தத்தில், உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.

நிலக்கோட்டை அருகே உலக தாய்பால் வார விழா நடைபெற்றது.

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு , வத்தலக்குண்டு ரோட்டரி சங்கத்தின் சார்பாக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.

நிலக்கோட்டை ஒன்றியம், பிள்ளையார் நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 70 -க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண் தாய்மார்களுக்குஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வத்தலக்குண்டு ரோட்டரி சங்க தலைவர் மருத்துவர் யூசுப் மௌலானா அனைவரையும் வரவேற்றார்.

பிள்ளையார் நத்தம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கவிதா தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி துணை ஆளுநர் மாதவன் விளக்கினார்.

திட்டத்தின் தலைவர் மெடிக்கல் ராஜேஷ், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் இளஞ்செழியன் ,ராஜ பிரபாகரன். மதன்குமார், ராஜ்குமார், தினேஷ் மற்றும் செவிலியர்கள். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பட்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில், செயலாளர் பேராசிரியர் மகேந்திர பாண்டியன் நன்றி தெரிவித்தார்.

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்