பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சா 200 கிலோ பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது

பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சா 200 கிலோ பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது
X

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்த 200 கிலோ கஞ்சா போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

நிலக்கோட்டை டிஎஸ்பி.சுகுமார் தலைமையில் பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரன், காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்த 200 கிலோ கஞ்சா போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக எஸ்பி.சீனிவாசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, நிலக்கோட்டை டிஎஸ்பி.சுகுமார் தலைமையில் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சங்கரேஸ்வரன் மற்றும் காவலர்கள் பட்டிவீரன்பட்டி பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் வேட்டையின் போது ,சாலைப்புதூர் பகுதியில் உள்ள நாட்ராயன் என்பவர் வீட்டில் சோதனை செய்ததில் சுமார் 200 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாட்ராயன் (48), நெல்லூரை சேர்ந்த நவீன்குமார் (25), விருவீட்டைச் சேர்ந்த சேதுபதி (22) ஆகிய 3 பேரையும் கைது செய்து 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினரை எஸ்பி சீனிவாசன் நேரில் சென்று வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!