public demand action against private hospital தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு தனியார் ஆஸ்பத்திரி முன் மறியல்
பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததால் தனியார் ஆஸ்பத்திரி முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
தனியார் ஆஸ்பத்திரி முற்றுகை
திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி காந்திகிராமம் கஸ்தூரிபா தனியார் மருத்துவமனையில், பெரிய கோட்டையை சேர்ந்த காளீஸ்வரி என்பவருக்கு வயிற்றுவலி காரணமாக கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து உறவினர்கள் யாரும் காளீஸ்வரியை பார்க்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லையாம்.
இந்நிலையில், காளீஸ்வரி உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறி திண்டுக்கல் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லுங்கள் என, மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக தெரிகிறது.
இதனை அடுத்து, சிகிச்சை பெற்று வந்த காளீஸ்வரி உயிரிழந்ததாக தகவல் பரவியதை அடுத்து, உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர்.
சம்பவ இடத்தில், புறநகர் டிஎஸ்பி உதயகுமார் மற்றும் தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
5பேர் சிறைப்பிடிப்பு :போலீசார் விசாரணை
திண்டுக்கல்லில் வட்டி பணத்திற்காக இரண்டு குழந்தைகள் உட்பட 5 நபர்களை ரவுடி கும்பல் அவர்களது வீட்டிற்குள் புகுந்து சிறை பிடித்த சம்பவத்தில் ராஜா கருப்பையா, ரவி, சரவணன் ஆகிய மூவர் மீது வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல் ,கொலை மிரட்டல் விடுத்தல், திருடுதல், வீட்டில் சிறை வைத்தல், காயம் ஏற்படுத்துதல், கலவரம் மூட்டுதல் உள்ளிட்ட எட்டு பிரிவின் கீழ் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு ப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயில் கும்பாபிஷேக விழா
பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டவர்கள்
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர், பாளையம் பகுதியில், வ உ சி பஸ் நிலையம் தென்புறம் அமைந்துள்ள, பழமை வாய்ந்த பேரருள் நிறைந்த, அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை, செல்வ சுப்பிரமணிய குருக்கள் குழுவினர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில், அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட த்
தலைவர் ஜே பி சரவணன், டாக்டர் விமல்குமார், அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், நகர செயலாளர் முருகானந்தம், முன்னாள் கவுன்சிலர் இரா.பகவதி, கணேசன், பழனிக்குமார், ரியல் எஸ்டேட் கணேசன், சரவணன், நாகையா, மற்றும் சிவபாலமூர்த்தி, அரிமா ஐயப்பன், மேலும், அரிமா அசோக்பெருமாள், கட்டிட வல்லுநர் நேரு, அரிமா சுந்தரம், த.மா.கா. சங்கர் & கோ சுந்தர், குமார், மேலும் பழனி முக்கிய பிரமுகர்கள் உட்பட பொதுமக்கள், பக்தர்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu