உடலை வாங்க மறுத்து இரண்டாம் நாளாக போராட்டம்: எஸ்.பி. விசாரணை

உடலை வாங்க மறுத்து இரண்டாம் நாளாக போராட்டம்: எஸ்.பி. விசாரணை
X

திண்டுக்கல்லில் விதிகளை மீது இயக்கப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட  வாகனங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்

வத்தலக்குண்டு தொழிலாளி கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம்,வத்தலகுண்டுவில் கட்டிட தொழிலாளி பாண்டியராஜன் கொலை செய்த வழக்கில் குற்றவாளி களை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என இன்று 2-ம் நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிரேத பரிசோதனை முடிந்தும் அவரது உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வேலைக்கு சென்ற இடத்தில் பழகி வந்த 3 பேர் ஒன்றாக சேர்ந்து டாஸ்மாக் கடைக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பாண்டியராஜனுடன் சென்றவர்கள் யார் என 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.என்றும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும், வத்தலகுண்டு காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் விசாரணை மேற்கொண்டார்.

இரும்பு வியாபாரி கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கடந்த 10-ம் தேதி திண்டுக்கல்லை சேர்ந்த இரும்பு வியாபாரி அழகர் என்பவரை செய்தது தொடர்பாக சதீஸ், கார்த்தி, சிவகணேசசபரி, மாணிக்கம், சர்புதீன் ஆகியோர் திண்டுக்கல் கோர்ட்டில் சரணடைந்தனர்.

இதனையடுத்து சரணடைந்த 5 பேர்களையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என நிலக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் நிலக்கோட்டை போலீசார் அனுமதி கோரினர். மாஜிஸ்திரேட் நல்லகண்ணன் அவர்கள் 5 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் குருவெங்கட்ராஜ் தலைமை யிலான போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.

விதிகளை மீறி இயக்கப்பட்ட லாரிகள் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ,சாலை விதிகளை மீறி இயக்கப்படுகிறதா? என்று வாகனங்களை சோதனை செய்தனர். அதில் சொந்த பயன்பாட்டுக்கு பதிவு செய்து வாடகைக்கு இயக்கப்பட்ட 3 கார்கள், பள்ளி மாணவ-மாணவிகளை அதிக அளவில் ஏற்றி வந்த 2 ஆட்டோக்கள் சிக்கின. இதையடுத்து 3 கார்கள் மற்றும் 2 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், திண்டுக்கல்-மதுரை சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி சென்ற 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 7 வாகனங்களுக்கும் மொத்தம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்