நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை..!

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை..!
X

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட, மாற்றுத்திறனாளிகள்.

நூறுநாள் வேலைக்கான ஊதியத்தை தராததைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை இட்டனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோருக்கும் ஒரே வாழ்வாதாரம் 100 நாள் வேலை திட்டம் மட்டுமே. இத்திட்டத்தில் கிடைக்கும் வருமானத்தை நம்பியே பல குடும்பங்கள் உயிர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசு கடந்த பத்து வாரங்களுக்கு மேலாக நூறுநாள் வேலை செய்தவர்களுக்கான ஊதியத்தை வழங்காமல் காலம் கடத்தி வருகிறது. ஊதியம் கிடைக்காத காரணத்தினால், மாற்றுத்திறனாளிகள் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லட்சக்கணக்கான கோடிகளை தள்ளுபடி செய்யும் அரசு ஏழை எளிய கிராமப்புற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய 100 நாள் வேலைக்கான ஊதியத்தை பிடித்து வைத்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தராமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக 100 நாள் வேலைக்கான ஊதியத்தை அரசு வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சசிகுமார் தலைமையேற்று நடத்தினார். இதில், பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் கலந்து கொண்டனர்.

கிராமங்களில் வேலை கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் இந்த நூறுநாள் வேலையை நம்பி இருக்கின்றனர். குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு மட்டுமே இந்த நூறுநாள் வேலை வழங்கி வருவதால் முதியோராக இருக்கும் கணவன் மனைவி மட்டுமே வாழும் குடும்பத்திற்கு இந்த நூறுநாள் வேலை மூலம் கிடைக்கும் வருவாய் பெரிய உதவியாக இருக்கும். ஆனால் இப்படி கடந்த மூன்று மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் கிடைக்காமல் இருந்தால் அவர்கள் பெரும் துனபத்துக்கு ஆளாவார்கள்.

அதனால் அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு ஊதியம் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்