நிலக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் பிறந்த தினம்

நிலக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் பிறந்த தினம்
X

நிலக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பிறந்த தினம் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.

நிலக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பிறந்த தினம் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.

நிலக்கோட்டையில், முன்னாள் அமைச்சரும், துணை பொதுச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதன், பிறந்த தனமானது அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, நிலக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். தேன்மொழி, முன்னாள் எம்.பி. எம். உதயக்குமார், நிலக்கோட்டை கிழக்கு ஓன்றியச் செயலாளர் பி. யாகப்பன், மேற்கு ஓன்றியச் செயலாளர் எம்.கே. நல்லதம்பி, நகர அதிமுக செயலாளர்கள் வி.எஸ்.எஸ். சேகர், ஆர். தண்டபாணி ஆகியோர் தலைமை வகித்தனர்.

அதிமுக மாவட்ட தகவல் நுட்பப் பிரிவு செயலர் வி. சதிஷ்குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கப் பாண்டியன், மாவட்ட மாணவரணி துணைத் தலைவரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிலக்கோட்டை நகர அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு சார்பில், ஜாய்ஸ் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ஓன்றிய அவைத் தலைவர் தவமணி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வீரமணி ராஜா, மாவட்ட வழக்கறிஞர் துணைச் செயலர் புரட்சிமணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் பாலகுரு, ஊத்தப்பம் கணேசன், மேட்டூர் செந்தில், தகவல் தொழில் நுட்பப் பிரிவு நகர செயலாளர் பா. ஆதர்ஷ் நிர்வாகிகள் உதயக்குமார், ஜோசப், நவீன், தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை, நிலக்கோட்டை அதிமுக தகவல் தொழில் நுட்ப அமைப்பின் நிர்வாகிகள்,நகர் அதிமுகவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
the future of work and ai