திண்டுக்கல் மாவட்ட செய்திகள், கிராமத்தில் குளம் போல தேங்கியுள்ள நீர்:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கிராமத்தில் தேங்கியுள்ள மழை நீர்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பிள்ளையார் நத்தம் ஊராட்சியில், சொக்குப் பிள்ளை பெட்டி ஏழாவது வார்டில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இவ்வாறு மழைநீர் தேங்கி இருப்பதால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் இருப்பதால், இதை சரி செய்ய பலமுறை மனு அளித்தும் ஊராட்சி நிர்வாகம் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, மழைநீர் தேங்காத வண்ணம் சீரமைக்க நடவடிக்கை எடுத்து சரி செய்யும் படி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆத்தூர் தாலுகா, அலுவலகம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் சாலையை பராமரித்திட வேண்டி கோரிக்கை:
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் செயல்பட்டு வரும் தாலுகா அலுவலகத்திற்கு ஆத்தூர் தாலுகா பகுதிகளான சின்னாளப்பட்டி, சீவல் சரகு, ஆத்தூர், சித்தையன் கோட்டை, சித்தரேவு , அய்யம் பாளையம், பெரும்பாறை, மணலூர் ஆகிய கிராமப்புற பகுதியிலிருந்து பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் , ஆத்தூர் தாலுகா அலுவலகம் செல்லும் சாலை பராமரிப்பின்றி சிதலமடைந்த நிலையில் குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி ஆத்தூர் தாலுகா அலுவலகம் செல்லும் சாலையை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி சீரமைத்து தந்து உதவிட வேண்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது, தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமியின் தொகுதி ஆகும். அமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu