திண்டுக்கல் மாவட்ட செய்திகள்: நிலக்கோட்டை அருகே கனிம வளம் கொள்ளை தடுக்கப்படுமா?
நிலக்கோட்டை அருகே கனிம வளக் கொள்ளை
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, சித்தநத்தம் வருவாய் துறைக்கு உட்பட்ட குண்டலாம்பட்டி கிராமம் அருகே மலை அடிவாரத்தில், ஜேசிபி எந்திரம் மூலம் கனரக வாகனத்தில் கனிம வளங்கள் சட்ட விதிமுறைகளுக்கு புறம்பான முறையில் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்துடனையே பயணம் செய்து வருகின்றனர்.
எனவே, உடனடியாக கனிம வளங்களை கொள்ளையடிக்கும் மாபியா கும்பலை கைது செய்வதோடு, கனிம வளங்கள் கொள்ளை அடிப்பதை அரசு தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
நத்தம் பேரூராட்சியில் கவுன்சிலர் கூட்டம்
நத்தம் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு பேரூராட்சி சேர்மன் சேக் சிக்கந்தர் பாட்ஷா தலைமை தாங்கினார் துணை தலைவர் மகேஸ்வரி சரவணன், செயல் அலுவலர் சரவணகுமார், முன்னிலை வகித்தனர்
கூட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஏரியா கிராமசபை கூட்டத்தில் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வேண்டும் என்று மேலும் 18 வார்டுகளில் நடைபெறும் அடிப்படை வசதிகள் மேற்கொள்வதென்றும் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இதில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி, கவுன்சிலர்கள் வசந்த சுஜாதா, கலாவதி, சிவா,இஸ்மாயில்,ராம, கண்ணன், பழனிக்குமார், உமாமகேஸ்வரி, சகுபர் சாதிக்(எ) துரை, உசேன் பரிதா, லதா, சுமதி, வைதேகி, விஜயவீரன்,மாரிமுத்து, பேரூராட்சி அலுவலக உதவியாளர்கள் ஜெய்சங்கர், அழகர்சாமி,பிரசாந்த், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில், அரசால் தடை செய்யப்பட்ட 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்,
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் (பொறுப்பு) செபாஸ்டின் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் செல்வராணி, காமராஜ், கேசவன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் மேற்கு ரத வீதி பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது 4 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறிந்து அந்த கடைகளில் இருந்து 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அந்த 4 கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.13,500 அபராதம் விதித்தனர்.
கொடைக்கானல் அருகே ரேஷன் கடை ஜன்னலை உடைத்த காட்டுயானை
திண்டுக்கல் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பள்ளத்துக்கால்வாய் பகுதியில் காட்டுயானை ஒன்று குட்டியுடன் வந்தது. பின்னர் அந்த யானை, அங்கிருந்த ரேஷன் கடையின் ஜன்னலை உடைத்தது. பின்னர் அதன் வழியாக தும்பிக்கை முலம் ரேஷன் அரிசியை தின்றது. பின்னர் அங்கிருந்து அவை வனப்பகுதிக்கு சென்றன. ஆனால் செல்லும் வழியில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி வனத்துறையினர், அங்கு விரைந்து சென்று யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதி -வனத்துறை அறிவிப்பு .
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 10.09.2023 முதல் 26.09.2023 வரை பேரிஜம் ஏரிப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
யானைகள் நடமாட்டம் தென்படாத காரணத்தால் இன்று 27.09.2023 முதல் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரி செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu