நிலக்கோட்டை கல்லூரியில் புற்று நோய் விழிப்புணர்வு முகாம்
நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் சார்பில் நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ரோட்டரி சங்கம், நிலக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்த நடத்திய மாபெரும் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது. வத்தலகுண்டு லியானார்டு மருத்துவமனை லேப்ராஸ்கோபிக் & பொது அறுவை சிகிச்சை நிபுணர் சகோதரி மருத்துவர் ஜாக்குலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயின் நோயின் வகைகள் அதற்கான சிகிச்சை முறைகள் என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார் அப்போது நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டு பயப்படாமல் உடனடியாக மருத்துவர்கள் அணுக வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்,
மேலும் இவ்விழாவில் வத்தலகுண்டு இயற்கை மருத்துவ மருத்துவர் யூசுஃப் மௌலானா அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு - புற்றுநோயை தடுக்கும் வாழ்வியல் கலைகளும் உணவு முறைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார் அப்பொழுது அவர் நாம் எவ்வகையான வாழ்வியல் கலைகளை பின்பற்ற வேண்டும் உணவுகளை எப்படி தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்வை கல்லூரியில் முதல்வர் முனைவர் சு. கீதா தலைமை தாங்கினார், வத்தலகுண்டு ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் க. மாதவன் முன்னிலை வகித்தார், சங்க செயலாளர் மகேந்திர பாண்டியன் அனைவரையும் வரவேற்றார், இதில் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவியர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர், இறுதியாக கல்லூரியின் என் எஸ் எஸ் திட்ட அலுவலர் வெ.போ. தீபா நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu