திண்டுக்கல் அருகே ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது!

திண்டுக்கல் அருகே ரேஷன் அரிசியை  பதுக்கியவர் கைது!
X
திண்டுக்கல் அருகே ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் அருகே கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், ஒருவர் கைது:

திண்டுக்கல், சின்னாளப்பட்டி அருகே செட்டியபட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்

புலனாய்வுத்துறை ஆய்வாளர் கீதா, சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன், சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் காவலர்கள் சின்னாளப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, செட்டியபட்டி வாட்டர் டேங்க் அருகே 10 பைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்துவதற்காக பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு அதனை பறிமுதல் செய்து, கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த நாகராஜ்(50). என்பவரை, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வழக்கு ப்

பதிவு செய்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் கடைகளுக்கு அபராதம்:

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கிடைத்த தகவலின் அடிப்படையில், மாநகர் நல அலுவலர் (பொறுப்பு)செபாஸ்டின் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, செல்வராணி பாலமுருகன் ரெங்கராஜ், லாவண்யா உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் மேற்குரத வீதி பகுதியில் திடீர் சோதனை மேற்

கொண்டபோது, 3 மொத்த கடைகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட கேரி பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அந்த 3 கடைகளில் இருந்து 270 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அந்த 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.30,000 அபராதம் விதித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!