நிலக்கோட்டை அருகே காயம்பட்டவர்களை காப்பாற்றிய போலீஸ் ரோந்து வாகனம்

நிலக்கோட்டை அருகே காயம்பட்டவர்களை காப்பாற்றிய போலீஸ் ரோந்து வாகனம்
X

காயம்பட்டவர்களை காப்பாற்றிய போலீஸ் ரோந்து வாகனம்.

நிலக்கோட்டை அருகே காயம்பட்டவர்களை ரோந்து வாகன போலீசார் காப்பாற்றினர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, விபத்தில் அடிபட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், ஹைவே ரோந்து வாகனத்தில் ஏற்றி சென்ற போலீசாருக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கின.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மதுரை செல்லும் சாலையில் பாரத் பெட்ரோலியம் பங்க் அருகில் எதிர்பாராத விதமாக விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர்கள் அடிபட்டு படுகாயங்களுடன் ரோட்டில் கிடந்தனர். உடனடியாக, அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னால் அவ்வழியாக சென்ற அம்மைநாயக்கனூர் நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசார் விஜய் மற்றும் கங்காதரன் உடனடியாக அடிபட்டவர்களை நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் ஏற்றி சென்று நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால், 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் மனிதாபிமானத்துடன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த இரண்டு காவலர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இவர்கள் இருவருமே காக்கிச்சட்டைக்குள் உள்ளம் ஈரம் உள்ளதை மெய்பித்து விட்டனர்.

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்