நத்தத்தில் கஞ்சா விற்ற இளைஞர் கைது

நத்தத்தில் கஞ்சா விற்ற இளைஞர் கைது
X

நத்தத்தில் கஞ்சா விற்ற இளைஞர் கைது

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையப் பகுதியில் நத்தம் உதவி ஆய்வாளர் விஜயபாண்டியன் தலைமையிலான நத்தம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் நத்தம் அண்ணா நகரை சேர்ந்த ரஹ்மத்துல்லா மகன் முகமது ரபீக்(19)என்பதும் கஞ்சா விற்பனை ஈடுபடும் தெரிய வந்தது.இதையடுத்து விற்பனைக்கு வைத்திருந்த 1/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து முகமது ரபிக்கை திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையிலான நத்தம் காவல்துறையினர் முகமது ரபீக்கு எப்படி கஞ்சா கிடைத்தது, யாரிடமிருந்து கிடைத்தது, யார் யாருக்கு இதில் தொடர்பு என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai products for business