நத்தம் அருகே பெண்ணிற்கு சிறுதானிய உணவு அங்காடி அமைத்து கொடுத்த தன்னார்வலர்கள்
நத்தம் அருகே சிறுதானிய அங்காடி அமைக்க பெண்ணுக்கு உதவிய சமூக ஆர்வலர்கள்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாணார்பட்டி அருகே ரெட்டியபட்டியில் சமூக ஆர்வலர் பால் தாமஸ் தலைமையில் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைத்த நிதி மூலம் ஏழை பெண்ணிற்கு இலவசமாக கொடுக்கப்பட்ட சிறுதானிய அங்காடி திறப்பு விழா நடந்தது.
நத்தம் சாணார்பட்டி அருகே ,நொச்சிஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பால் தாமஸ். இவர் மரம் நடுதல், கொரோனா பாதிப்பு காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். இந்நிலையில், கவராயப்பட்டியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் ஏழ்மை நிலையில் உள்ள மரியஜோதி என்ற பெண்ணிற்கு இலவசமாக சிறுதானிய அங்காடியை அமைத்துக் கொடுத்துள்ளனர். இதற்காக பால் தாமஸ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து ரூ.55 ஆயிரம் நிதி திரட்டி சிறுதானிய உணவு பொருட்கள், விதை பொருள்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அங்காடியை உருவாக்கியுள்ளனர்.
அங்காடிக்கு தேவையான பொருட்கள், கடைக்கான முன்பணம் அனைத்தும் அவர்களே கொடுத்து உதவியுள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் ஜி.டி.என். கல்லூரி பேராசிரியர் முருகானந்தம், திண்டுக்கல் மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுனில் குமார்,அவரது மனைவி கல்யாணி, கொசவபட்டி சுகாதார ஆய்வாளர் முனியப்பன், முன்னாள் ராணுவ அதிகாரி மாறவர்மன், வெற்றி மொழி வெளியிட்டகத்தின் உரிமையாளர் தாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த அமைப்பினர் ஏற்கனவே வீடு இடிந்த மூதாட்டிக்கும், துப்புரவு பணியாளருக்கும் இரண்டு வீடுகள் அவர்களது சொந்த செலவில் கட்டிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.நிறைவாக பால் தாமஸ் நன்றி கூறினார்
நத்தத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நத்தம் முஸ்லிம் மேலத்தெரு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நத்தம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பதுருதீன் ஹஜ்ரத்,திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் முஹம்மது மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் தங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணைத்து கொண்டனர்.இதில் நத்தம் நகர தலைவர் மஸ்தான் ஹஜ்ரத்,நகர செயலாளர் அபுதாஹிர்,நத்தம் தொகுதி துணை செயலாளர் தர்பார் ஹாஜி நிஜாம்தீன்,தொகுதி இளைஞரணி செயலாளர் அப்துல் பாசித் அலி உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய, நகர,கிளை,நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu