நத்தத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

நத்தத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
X

திண்டுக்கல் மாவட்டம்  நத்தத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்.

வளாகத்தில் டெங்கு தடுப்பு கண்காட்சி அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சாணார்பட்டி அருகே கோம்பைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கே.அய்யாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி கார்த்திகைசாமி தலைமை வகித்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் வின்சென்ட் பால்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர் வரவேற்புரை ஆற்றினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அசோக்குமார் திட்ட விளக்க உரையாற்றினார். துணைத்தலைவர் இராசு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முகாமில் ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், இ.சி.ஜி, ஸ்கேன், எக்ஸ்ரே, கண் பரிசோதனை, எச்.ஐ.வி. பரிசோதனைகள், காசநோய், மலேரியா பரிசோதனைகள், சித்த மருத்துவம், பொது மருத்துவம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

டாக்டர் அருள் பிரசன்னா (எலும்பு சிறப்பு மருத்துவர்), டாக்டர்கள் ராஜேந்திரன், பிரபாகரன், செந்தில்குமார், சிவப்பிரியா, சித்தா மருத்துவர் ஆர்த்தி, பல் டாக்டர் ஆனந்த வடிவு, தோல் டாக்டர் ரவிச்சந்திரன், கண் மருத்துவர் மனோகரன் ஆகியோர் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் முனியப்பன், சிவக்குமார், அழகுராஜா, குணசீலன், ஊராட்சி செயலாளர் உமா ஆகியோர் செய்திருந்தனர். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வளாகத்தில் டெங்கு தடுப்பு கண்காட்சி அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிறைவாக சுகாதார ஆய்வாளர் நல்லேந்திரன் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!