/* */

நத்தத்தில் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

நத்தத்தில் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

நத்தத்தில் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
X

நத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முகம் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர்கள் மயில்ராஜ், முத்துமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில், நாடாளுமன்றத்தில் அச்சுறுத்தல் தரும் வகையில் வண்ண புகை குண்டுகளை வீசியவர்களையும் அவர்களுக்கு அனுமதி வழங்கிய பா.ஜ.க. எம்.பி.மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எதிர்கட்சிகளை சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த பா.ஜ.க .அரசை கண்டிக்கிறோம் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், ராமர், நாகராஜ், முத்துமணி, முருகன்,இ.சி.எ.பாசறை ஒன்றிய அமைப்பாளர் கரிகாலன் உள்ளிட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. பேரணியை, மண்டல உதவி திட்ட அலுவலர் தேன்ராஜ் துவக்கி வைத்தார். பேரணியில், நத்தம் வட்டாரத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினர் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். பேரணி நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கி, பேருந்து நிலையம் சென்று அடைந்தது. முன்னதாக, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு கோலம் வரையப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா முன்னிலையில் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது .

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, வட்டார இயக்க மேலாளர் .விஜயலக்ஷ்மி வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேன்மொழி, கலையரசி, சரிதா மற்றும் முத்துலட்சுமி செய்திருந்தனர்.

Updated On: 22 Dec 2023 10:11 AM GMT

Related News