நத்தம் அங்கன்வாடி மையம் அருகே குளம் போல தேங்கியுள்ள நீர்:சுகாதார சீர்கேடு?
நத்தம் அங்கன்வாடி மையம் அருகே, குளம் போல தேங்கியுள்ள மழை நீர்.
Stagnation Of Water Causes Disease
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் ஒன்றியம், சேத்தூர் ஊராட்சியில் உள்ளது பட்டிக்குளம் கிராமம். இங்கு அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. அதனருகில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் உள்ளது. இதற்கு முறையான கழிவு நீர் வாய்க்கால் இல்லை. எனவே, அப்பகுதியில் மழை நீர் மற்றும் கழிவுநீர் தேங்கி பல நாட்களாக இருந்து வருகிறது. இதனால், அங்கு வரும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பாக உள்ளது. இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர் கூறியதாவது: அங்கன்வாடி மையத்தை சுற்றி நீர் நிரம்பி இருப்பதால், அங்கு குழந்தைகள் செல்ல மிகுந்த சிரமமாக உள்ளதுடன். அங்கு செல்லும் குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ,சம்மந்தப்பட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொண்டு தேங்கியுள்ள நீரை அகற்ற தேவையான நடவடிக்கையினை மேற்கொள்வதோடு சுற்றுப்புறம் சுகாதாரமாக இருக்க உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் உலுப்பகுடி அருகே, சாலையில் நடத்து வந்து கொண்டிருந்த நத்தம் காமராஜ் நகரை சேர்ந்த காட்டுராஜா (60). என்பவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ,பலத்த காயமடைந்து நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சையில் இருந்த காட்டு ராஜா நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். சம்பவம் குறித்து, நத்தம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu