நத்தம் பகுதி கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா
நத்தம் பகுதி கோவில்களில் சனி பெயர்ச்சி விழா.
நத்தம் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ,நத்தம் கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கைலாசநாதர் சமேத செண்பகவல்லி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. இதையட்டி அங்கு யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சனிபகவானுக்கு பால் இளநீர் சந்தனம் ஜவ்வாது மஞ்சள் தேன் போன்ற 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ, தாழம்பூ, வாடாமல்லி, ஜாதிமல்லி, மலர்கள் கொண்ட சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் மூலவர் கைலாசநாதர் செண்பகவள்ளி அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. இதை போலவே மாரியம்மன் கோவில் அருகில் லட்சுமி விநாயகர் கோவிலில் உள்ள நவகிரக சநிநிதியில் சனிபகவானுக்கு பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
ராசி சுழற்சியின் மூலம் கிரகங்களின் மாற்றம் ஒரு நபரின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ராசிக்காரர்களால் உன்னிப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்திய ஜோதிட சாஸ்திரத்தில் சனி என்றும் அழைக்கப்படும் சனி கிரகம் ஒருவரின் வாழ்வில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், கிழக்கு நோக்கிய முகமாக தனி சந்நிதி கொண்டு சனீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழாவைமுன்னிட்டு புதன்கிழமை மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசித்தார் அப்போது சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அஷ்டோத்திர அர்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை, தில தீப வழிபாடு நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu