வெளி மாநில தொழிலாளர்களுக்கு, ரேசன் கார்டு: ஆட்சியர் தகவல்

வெளி மாநில தொழிலாளர்களுக்கு, ரேசன் கார்டு: ஆட்சியர் தகவல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி.

வெளி மாநில தொழிலாளர்களுக்கும் ரேசன் கார்டு வழங்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்

வெளி மாநிலங்களிலிருந்து தொழில் நிமித்தமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட தகவல்:

திண்டுக்கல் மாவட்டத்திற்கு தொழில் நிமித்தமாக வெளி மாநிலங்களிலிருந்து வந்த, தொழிலா ளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட உள்ளதால், பிற மாநிலங்களிலிருந்து தொழில் நிமித்தமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இணைய தளத்தில் பதிவு செய்து, இதுநாள் வரை குடும்ப அட்டை பெறாத தொழிலாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட உள்ளது.

எனவே, பிற மாநிலங்களிலிருந்து தொழில் நிமித்தமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் புதிய மின்னணு குடும்ப அட்டை பெற விரும்புகிறவர்கள் ‘tnpds.com” என்ற இணையதளத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்து, அதன் நகலுடன் தங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள தனி வட்டாட்சியர்(கு.பொ) மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் உரிய விண்ணப்பம் அளித்து புதிய மின்னணு குடும்ப அட்டை பெற்று பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story