போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு, 3 ஆண்டு சிறை

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு,  3 ஆண்டு சிறை
X

நீதிமன்ற தீர்ப்பு (கோப்பு படம்)

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு 3 ஆண்டு சிறைத்தணடனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து,திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராமலிங்கம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியிடம் கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் ரீதியாக, ஆபாசமாக சைகை செய்த குற்றத்திற்காக ராமலிங்கம்(59). என்பவரை, நத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ வழக்கு விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில், நத்தம் காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. விசாரணையில் நீதிபதி கருணாநிதி, பாலியல் ரீதியிலான சைகை செய்த ராமலிங்கத்திற்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் , ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Tags

Next Story
ai in future agriculture