திண்டுக்கல் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
திண்டுக்கல் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
நத்தம் அருகே சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் , சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புளியம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.இவர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி,தெரு விளக்கு, குடிநீர், கழிவு நீர் ஓடை,தடுப்புச் சுவர் உள்ளிட்டவைகளை 40 ஆண்டு காலமாக செய்து தராமல் உள்ளதை கண்டித்து கிராம மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து செவ்வாய்க்கிழமை சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கன்றுக் குட்டி, பாய், சமையல் பாத்திரங்கள், விறகு, குடம் உள்ளிட்ட பொருள்களை தலையில் சுமந்தவாறு சாணார்பட்டி பேருந்து நிறுத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி அலுவலகம் முன்பாக சாலையில் பாய் விரித்து தரையில் அமர்ந்து குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன், துணை கண்காணிப்பாளர் (ஊரகம்) உதயகுமார், இன்ஸ்பெக்டர்கள் தங்க முனியசாமி, விக்டோரியா லூர்து மேரி,உதவி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்புணியில் ஈடுபட்டிருந்தனர்.
40 ஆண்டு காலமாக அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து குடியேறும் போராட்டம் 1 மணி நேரம் நடத்தியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் பத்து நாட்களுக்குள் சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து வெகு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சமரச பேச்சு வார்த்தையில் நடத்திய பின் போராட்டம் கைவிடப்பட்டது.
நத்தம் ஒன்றிய ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே ஊராளிபட்டியில் அடுத்துள்ள காத்தாம்பட்டி கிராமசபைக்கூட்டம் நடந்தது. இதற்கு தேனம்மாள் தேன்சேகர் சபைக்கு தலைமை தாங்கினார். அனைவரையும் செயலர் ராஜேஷ்கணண்ணன் வரவேற்றார். கூட்டத்தில், பருவமழை முன் நடவடிக்கைகள், துப்புரவு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள் மீது விவாதம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், ஊராட்சி துறை, வருவாய், கல்வித்துறை வேளாண், சுகாதாரம், மின் துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
இதைப்போல், புன்னப்பட்டியில் ஊராட்சிமன்ற த்தலைவர் ஜெயப்பிரகாஷ், செல்லப் பநாயக்கன் பட்டி ஊராட்சிமன்ற த் தலைவர் சௌந்தரராஜன், பண்ணுவார்பட்டியில், ஊராட்சிமன்றத் தலைவர் ஆண்டிச்சாமி, லிங்கவாடியில், ஊராட்சிமன்ற த்தலைவர் அழகுநேரு,
குட்டுப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் அழகம்மாள் மணி, சிறுகுடி ஊராட்சிமன்றத்தில், கோகிலாவாணி வீரராகவன், வேலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், ரெட்டியபட்டி ஊராட்சி வத்திபட்டியில் தலைவர் சாத்திபவுர், பரளிபுதூரில் தலைவர் வெள்ளைத்தாய் தங்கராஜ், சாத்தம்பாடியில் தலைவர் பரமேஸ்வரி முருகன், ஆகியோர் தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது. நத்தம் ஒன்றியத்தில் மொத்தம் 23 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu