நத்தம் பகுதி செய்தி துளிகள்..

நத்தம் பகுதி செய்தி துளிகள்..
X

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் நடைபெற்ற மனுக்கள் வாங்கும் முகாம்.

நத்தம் பகுதிகளில் நடந்த பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பை பார்க்கலாம்

நத்தம் அருகே சாணார்பட்டி ஒன்றியத்தில் மனு வாங்கும் முகாம்

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நத்தம் அருகே சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில், உள்ள 21 ஊராட்சிகளில் புதன்கிழமை கோரிக்கை மனுக்கள் வாங்கும் முகாம்கள் நடைபெற்றன.

இதில், திம்மணநல்லூர் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டக் கவுன்சிலர் விஜயன் தலைமை வகித்தார். சாணார்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் பழனியம்மாள், மாவட்டக் கவுன்சிலர் லலிதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.

அப்போது பேசிய அவர், மகளிர் உரிமை தொகை இந்தியாவின் சிறப்பு திட்டம். இதில், கிடைக்க பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இந்த, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 100 சதவீத தீர்வு காணப்படும் என்றார். 21 ஊராட்சிகளில், நடைபெற்ற முகாம்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், தி.மு.க சாணார்பட்டி ஒன்றியச் செயலாளர்கள் தர்மராஜன், மோகன், சாணார்பட்டி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராம்தாஸ், நத்தம் பேரூராட்சி சேர்மன் சேக்சிக்கந்தர் பாட்சா, சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளையராஜா, அருள் கலாவதி, திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் வில்சன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள். கிராம நிர்வாக அலுவலர்கள் ,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சங்கம் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி கிராமம் வல்லம்பட்டியில் இருந்து வலசு வரை பேருந்து வசதியை நீட்டிக்க கோரி குரும்பப்பட்டியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட ச்செயலாளர் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .மாவட்ட துணைச் செயலாளர் முகேஷ் மற்றும் கிளை நிர்வாகிகள் விஜய் நாகராஜ் ஆண்டி சொக்கர் வேல்மணி ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் சாணார்பட்டி அருகே கொச வபட்டியில், சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்த ஜேசுவை 54, 'போலீசார் கைது செய்தனர், வீட்டில் பெரிய வகை பேப் பர் வெடிகள், வானவெடிகள் தயாரித்தது தெரியவர, இவரை நத்தம் ஆய்வாளர் தங்க முனிய சாமி கைது செய்தார்.

அங்கிருந்த அரை கிலோ வெடி மருந்துகள், மூங்கில் குச்சிகளால் செய்யப்பட்ட வானவெடி கள், திரியால் சுற்றப்பட்ட சணல் வெடிகளை பறிமுதல் செய்தார். அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். மேலும், நத்தம் மற்றும் சாணார்பட்டி காவல் நிலைய சரகங்களில் எவரேனும் அரசு உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் தயாரிப்பதாகவோ / பதுக்கி வைத்துள்ள தாகவோ தெரிய வந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கவும்..அது தொடர்பான தகவல் தெரிவிப்பவர் பற்றிய இரகசியம் காக்கப்படும் எனவும், நத்தம் வட்ட காவல் ஆய்வாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!