மார்கழி மாத பூஜைகள் தொடக்கம்: கோயில்களில் திரண்ட பக்தர்கள்
நத்தம் கைலாசநாதர் ஆலயத்தில் ,மார்கழி மாத சிறப்பு பூஜை.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவில் அம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ,தாழம்பூ, வாடாமல்லி, ஜாதிமல்லி, மலர்கள் கொண்ட சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
இதேபோன்று கோவில்பட்டி அருள்மிகு கைலாசநாதர் சமேத செண்பகவல்லி கோவில், மீனாட்சிபுரம் காளியம்மன் கோவில், அசோக்நகர் பகவதி அம்மன் கோவில், தெலுங்கர் தெரு காளியம்மன் கோவில், அரண்மனை சந்தன கருப்பு கோவில், கோவில்பட்டி பிடாரியம்மன் கோவில், பெரிய விநாயகர் கோவில், லட்சுமி விநாயகர் கோவில், கர்ணம் தெரு மதுர காளியம்மன் கோவில், வெட்டுக்கார தெரு பத்திரகாளி அம்மன் ஆகிய கோவில்களில் இன்று அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இன்று துவங்கி மார்கழி மாதம் முடியும் வரை அதிகாலையில் சிறப்பு வழிபாடும் திருப்பாவை, திருவெம்பாவை பாடுதலும் நடக்கிறது.மார்கழி மாதம் இன்று பிறப்பதை முன்னிட்டு நத்தம் வட்டாரத்தில் உள்ள கோவில்களில் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடு நடக்கிறது.
மாதங்களில் நான் மார்கழியாய் இருப்பேன் என பகவான் கிருஷ்ணர் கூறியதால் மார்கழி மாதம் போற்றுதலுக்குரிய மாதமாக உள்ளது. இந்த மாதத்தில் இறைவனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
மார்கழி மாத பிறப்பையொட்டி நத்தம்-கோவில்பட்டி அக்ரஹாரத்தில் உள்ள பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
இதேபோல, மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இம்மையில் நன்மை தருவார், பழைய சொக்கநாதர், தெப்பக்குளம் மாரியம்மன், மதுரை அண்ணாநகர் யாணைக்குழாய் முத்துமாரியம்மன், மதுரை ஆவின் சாத்தமங்கலம் பால விநாயகர், சோழவந்தான், ஜெனகை மாரியம்மன், நாராயணப் பெருமாள், பிரளயநாத சிவன் ஆலயம், மதுரை மதிச்சியம் வீரமா காளியம்மன் ஆலயங்களில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சோழவந்தானில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பஜனை குழுவினர் ஊர்வலம்:
சோழவந்தானில், மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று காலை சோழவந்தான் ராவுத்த நாயக்கர் தெரு ஸ்ரீ கொண்டல் ராவுத்தர் ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் பஜனை மடத்திலிருந்து நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலம் வந்தனர் தொடர்ந்து பஜனை பாடல்கள் பாடினர் அதில் காலையில் நீவைத்திய அபிஷேகம் அன்னதானம் நடைபெற்றது. ஆன்மீகவாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu