நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைகள் கட்டிடம் திறப்பு

நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைகள் கட்டிடம் திறப்பு
X

நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில், புதிய வகுப்பறை  கட்டிடங்கள் திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன்.

நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைகள் கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திறந்து வைத்தார்

நத்தத்தில் புதிதாய் வகுப்பறைகளை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நத்தம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 34.5 லட்சம் மதிப்பில் புதிதாய் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகள் கட்டிடத்தை நத்தம் சட்டமன்ற உறுப்பினர் இரா. விஸ்வநாதன் திறந்து வைத்தார்.

மேலும் வேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நத்தம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, 18.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட, இரண்டு வகுப்பறைகள் கட்டிடத்தை திறந்து வைத்தார்.இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இருபால் ஆசிரியர்கள், மாணவிகள், ஒன்றிய செயலாளர் மணிகண்டன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்டபேரவை இணை செயலாளர்கள் சுப்ரமணியன், ஜெயபாலன்,

மாவட்ட கவுன்சிலர்பார்வதி மணிகண்டன்,நகர அவைத்தலைவர் சேக்ஒலி,தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல இணைச்செயலாளர் தினேஷ்குமார்,மகளிர் அணி செயலாளர் அம்பிகா, பேரூராட்சி கவுன்சிலர்கள் சுமதிசெந்தில், சிவா,கண்ணன், ஊராட்சி தலைவர்கள் கண்ணன் ஆண்டிச்சாமி, ஜெயபிரகாஷ் மீனாட்சிபுரம் கிளை நிர்வாகிகள் வேலு, மாரிமுத்து, ஆவின் செந்தில்குமார் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!