ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.8.70லட்சம் பணம் பறிமுதல்

ஆவணம் இன்றி கொண்டு சென்ற  ரூ.8.70லட்சம் பணம் பறிமுதல்
X
ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.8.70 லட்சம் பணம் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

நத்தம் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் காரில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.8.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நத்தம் அருகே செந்துறையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணக்காட்டூரில் இருந்து நத்தம் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அந்த காரில் ரூ.8 லட்சத்து 71 ஆயிரத்து 950 இருப்பது தெரிய வந்தது. அந்த பணத்திற்கு எந்த வித ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. அதனால், அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!