நத்தம் அருகே தானம் செய்தது தொடர்பான கல்வெட்டு கண்டுபிடிப்பு
கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பத்துறை ஆய்வாளர் தேவி தலைமையில் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு செய்தனர்
நத்தம் அருகே லி.வலையப்பட்டியில் தாகம் தீர்க்க தண்ணீர் வழங்க தர்மம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே லி.வலையப்பட்டியில் பழங்கால கல்வெட்டு ஒன்று இருப்பதாக மதுரையைச் சேர்ந்தகோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பத்துறை ஆய்வாளர்தேவி, வரலாற்று ஆய்வாளர்கள் அறிவு செல்வம், தனசேகரன், மணிகண்டன், பாலசுப்பிரமணியன், முருகேசன் ஆகியோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து அப்பகுதியில் கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பத்துறை ஆய்வாளர் தேவி தலைமையில் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு செய்தனர்.பின்னர் இது குறித்து தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு:- நத்தம் அருகே லி.வலையப்பட்டி உள்ள நல்லதங்காள் கோயில் அருகே 5 அடி உயரம், ஒரு அடி அகலம், இரண்டரை அடி நீளம் கொண்ட செவ்வக கல்லானது மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. இதில் 19 வரிகளுக்கும் மேல் எழுத்துக்கள் கொண்டதாக இக் கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டில் சூரியன், சந்திரன் நடுவில் முத்தலை சூலாயுதம் பொறிக்கப்பட்டுள்ளது. 19 வரிகளுக்கு கீழே கல்வெட்டு மண்ணில் புதைந்து இருந்ததால் எழுத்துகளை என்னவென்று அறிய முடியவில்லை. கல்வெட்டு சொல்லும் செய்தியானது இங்கு மடம்கட்டி, சோலை அமைத்து, கிணறு வெட்டி அவ்வழியாக செல்லும் வழிப் போக்கர்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் வழங்க தர்மம் அளிக்கப்பட்டுள்ளதை தெரிவிக்கிறது. மேலும் இதை தவறாக பயன்படுத்தினால் என்ற வார்த்தையுடன் கல்வெட்டு காண முடிகிறது.இக் கல்வட்டானது கிபி 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu