திண்டுக்கல் மாவட்டத்தில் 4ல் திமுக, 3 இடங்களில் அதிமுக முன்னிலை

திண்டுக்கல் மாவட்டத்தில் 4ல் திமுக, 3 இடங்களில் அதிமுக முன்னிலை
X
திண்டுக்கல் மாவட்டத்தில் 4 இடங்களில் திமுக, 3 இடங்களில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில், திமுக நான்கு இடங்களிலும், அதிமுக மூன்று தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன், நத்தம் தொகுதியில் விஸ்வநாதன், மற்றும் நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
அதேபோல், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், வேடச்சந்தூர் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். பழனியில் ஐ.பி. செந்தில்குமார், ஒட்டன்சத்திரத்தில் சக்கரபாணி, ஆத்தூரில் ஐ. பெரியசாமி ஆகியோர் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளனர்.

Tags

Next Story
free business card ai